Thursday 9 September 2010

உன் பெயர்..

உனக்காக ஒரு கவிதை எழுத அமர்ந்தாள்
வரும் முதல் எழுத்து உன் பெயரின் முதல் எழுத்து..

பிரியம் எனும் சொல் உன் பெயரில் மட்டுமல்ல
என்னிலும் உணர வைத்தாய்..

ரிங்காரமை ஒலித்து கொண்டு இருக்கும்
என் கைபேசி திரையில் உன் பெயர்!!

தனிமையின் கொடுமையிலும் இன்பம் காண்கிறேன்
உன் பெயரை எழுதும் போது...

Sunday 11 July 2010

விண்ணை தாண்டி வருவாயா?

"ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ .. 
போவாயோ, கானல் நீர் போலே தோன்றி.."
      - பலரும் வாழ்வில் கேட்க விரும்பும் / துடிக்கும் வரிகள்.  சிலரின் வாழ்வில் மட்டுமே உணரப்பட்ட வரிகள்.


விண் - வாழ்கை  இப்படிதான் இருக்க வேண்டும் என்று தாங்களே கட்டி கொண்ட ஆகாயம் போன்ற சுவர்..


பலரும் காதலில் விழ்வது அந்த  விண் கிடைத்து விட்டது என்று நம்பிதான்..  அதில் சிறு ஏமாற்றங்கள் / தடைகள் வரும்போது அதை ஏற்று  கொண்டு விண்ணை தாண்டி அண்டத்தை அடைய விரும்பாமல், மற்றொரு காதலை நாடுகின்றனர். பலர் அதில் சந்தோசம் காண்பதாக நம்புகின்றனர், ஒரு நாள் விண்ணை தாண்டி இருக்கலாமோ என்று நினைக்கும் வரை.. அன்று இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதகிறது..



இது விமர்சனம் என்று நம்பி படிக்க வந்த வாசகர்களுக்காக..

இந்த படம் ஓடிய காரணம்..
விண்ணை தாண்டி வருவாயா என்று ஏங்கும் கார்த்திக்.. ஆனால், நிஜ வாழ்வில் என்றும் விண்ணை தாண்டாத ஜெஸ்ஸி..

இந்த இரு மாறா படைப்புகளின் அழகிய வெளிப்பாடு.. மற்றும் தங்களை திரையில் கண்டு மகிழ்ந்த நிஜ கார்த்திக்கள், ஜெஸ்ஸிகள் மற்றும் அவர்களின் நண்பர்கள் தான்..

Wednesday 16 June 2010








ஆண் - நினைவுகளில் வாழ்பவன்
பெண் - நினைவில்லாமல் வாழ்பவள்





பல கானல் உறவுகளை உருவாக்குகிறது 


நிஜ உறவுகளை மறைத்து 


  - கைபேசி






பிரிந்த உடன்  தெரிந்தது நம் காதலின் அருமை 


புரிந்தது நம் இருவரின் மடமை









இரு ஒத்த மனங்களின் அன்பினால் உருவாக வேண்டியது


   ஆனால் இன்று 


இரு ஒத்த கண்களின் உருவாகி 


இரு கோடுகள் போல் என்றும் சேர்த் தே பிரித்து வைப்பது 


   - காதல் 










வேண்டும் என்றேன் வேண்டாம் என்றாய்


வேண்டாம் என்றேன் வேண்டும் என்றாய்


விலகி சென்றேன் நெருங்கி வந்தாய்


நெருங்கி வந்தேன் விலகி சென்றாய்


விளங்கவில்லை யார் புரிந்து கொள்ளவில்லை என்று
விளங்கிய போது தனியாய் நின்றேன் அதே கேள்வியுடன்